• Jul 26 2025

மயில்சாமி வீட்டு வாசலில் உள்ள வாசகம் மாதிரியே வாழ்ந்துட்டு போய்ட்டாரு....வைரலாகும் புகைப்படம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி  நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  

2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார் .  மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, பார்த்திபன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தனது வீட்டின் முன்பு மயில்சாமி குறிப்பிட்டு வைத்துள்ள வாசகம் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 

அவரது வீட்டின் வாசலின் ஒரு பக்கம் "அன்பே கடவுள் இல்லம்" என்ற வாசகமும், இன்னொரு பக்கம் அவரது வீட்டு எண்ணுடன் "நல்லவன் வாழ்வான்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தான் வாழ்வில் செய்ததையே வீட்டில் உள்ள முன்பக்கமும் வாசகமாக குறிப்பிட்டு வைத்துள்ள மயில்சாமியை இன்னும் உருக்கத்துடன் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement