• Jul 26 2025

உடல் எடை அதிகரித்து.. ஆண்டியாக மாறிய அனுஷ்கா.. வெளியான வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'சூப்பர்' என்ற படத்தின் மூலமாக தனது சினிமா கேரியரை தொடங்கிய நடிகை அனுஷ்கா 'அருந்ததி' என்ற  படத்தின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் இணைந்து ஜோடி போட்டு நடித்தார். 


இருப்பினும் இவர் நடித்த 'இஞ்சி இடுப்பழகி' என்ற திரைப்படம் அவருக்கு பல பிரச்சனைகளை உருவாக்கியது. அதாவது அந்தப் படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவால் அதனைத் திரும்பக் குறைக்க முடியவில்லை. 


தொடர்ந்து பல நாட்களாக உடல் எடை குறைப்பு சிகிச்சை எடுத்து வந்தாலும், முன்பு போல் உடல் எடை குறைய முடியவில்லை. இதனால் 35 வயதாகியும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். 


இதையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மனம் திறந்து பேசி இருக்கின்றார். அத்தோடு சமீபத்தில் புதிய படம் ஒன்றிற்கு அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறைத்து உள்ளதாக தகவல் வெளியானது. 


ஆனால் சமீபத்தில் வெளியான அவரது வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறைத்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்பதனை உறுதி செய்துள்ளனர். அந்தவகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அனுஷ்கா தனது தாயுடன் பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களே வெளியாகி இருக்கின்றன. அதில் அனுஷ்கா மிகவும் குண்டாக தெரிகிறார். இதனைப் பார்த்த பலரும் ஷாக்கானதோடு "அனுஷ்கா ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார்.. ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறார்" என கமெண்டுகள் மூலமாக கேட்டும் வருகின்றனர்.


Advertisement

Advertisement