• Jul 26 2025

ஜீவாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை கூட கவனிக்காமல் தனம் வீட்டுக்கு வந்த மீனா- சந்தேகத்தில் கதிர் மற்றும் கண்ணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மூர்த்தி கடைக்காரர் ஒருவரின் மனைவி கான்சர் நோயினால் செத்துப் போயிட்டாங்க என்று சொல்கின்றார்.இதனைக் கேட்ட தனம் இதே மாதிரி எனக்கு நடந்தா என்ன பண்ணுவீங்க என்று கேட்க மூர்த்தி கோபப்பட்டு திட்டுகின்றார்.

வீட்டில யாருக்கு நடந்தாலும் தாங்க மாட்டேன், இதில உனக்கு வேற நடக்கணுமா? என் தனம் வாயை வைச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா என்று திட்டுகின்றார்.எல்லோரும் சேர்ந்து தனத்தை திட்ட தனம் சமாளித்து விடுகின்றார்.பின்னர் விடிந்ததும் தனம் தனியாக நின்று கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றார்.


இவரின் நடவடிக்கை வித்தியாசமாக இருக்கே என்று கண்ணன் என்னாச்சு அண்ணி என்று விசாரிக்கின்றார்.அப்போது தனம் புகை வருது அதான் அழுகிறேன் என்று சொல்ல ஹாஸ் அடுப்பில எப்பிடி அண்ணி புகை வரும் என்று சொல்ல கடுப்பான தனம் கண்ணனைத் திட்டி அந்த இடத்திலிருந்து அனுப்புகின்றார்.

அந்த நேரம் கதிர் வர கண்ணன் அண்ணி தன்னை திட்டி அனுப்பியதாக சொல்ல கதிர் தனத்திடம் பேசலாம் என்று போக தனம் கதிரையும் திட்டுகின்றார்.இதனால் கதிர் என்னாச்சு அண்ணி நீங்க நல்லாத் தானே இருக்கிறீங்க எனக் கேட்க எல்லாருமே இதைத் தான் கேட்பீங்களா நான் நல்லாத் தான் இருக்கிறேன் என்று சொல்கின்றார்.

தொடர்ந்து மீனா குளித்து விட்டு வந்து தனம் வீட்டுக்கு போவதற்காக ஜீவாவை எழுப்புகின்றார். அப்போது ஜீவாவுக்கு காய்ச்சல் காய்வதைப் பார்த்து மாத்திரை எல்லாம் கொடுத்து விட்டு தனம் வீட்டுக்கு போகப் போறேன் என்று சொல்கின்றார். அப்போது ஜீவா நேற்று தானே போன என்று சொல்ல மீனா இல்லை இன்டைக்கும் போகணும் போல இருக்கு என்று சமாளித்து விட மீனாவின் அம்மாவும் உனக்கு மாப்பிள்ளையை விட அவங்க வீடு தான் முக்கியமா எனத் திட்டுகின்றார்.


தொடர்ந்து மீனாவும் தனமும் ஹாஸ்பிட்டலுக்கு போகும் போது அங்கே டாக்டர் தனத்திற்கு உடனடியாக ஆபிரேஷன் செய்ய வேண்டும். அதுக்கு முதல் குழந்தையை சிசேரியன் செய்து வெளியில் எடுக்கனும் வீட்டில சொல்லிடுங்க, உடனடியாக ரீட்மென்ட் ஆரம்பிக்கணும் என்று சொல்கின்றார்.இதனால் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement