• Jul 25 2025

தலை முடி வளர்க்கிறது ஒரு குற்றமா?- மீண்டும் புதிய பிரச்சினையில் சிக்கிய சிம்பு- எப்படித் தான் சமாளிக்கப் போகின்றாரோ?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் ஆரம்பத்திலிருநதே இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அண்மையில் கூட நடிகர் சங்கத்தினரால் இவருக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இப்போது பெரும் பிரச்சினையாக சினிமாவில் பார்க்கப்படுவது நடிகர் சிம்பு ஐசரி கணேஷ் பற்றிய பிரச்சினைதான். வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கும் போதே தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்கள் நடித்துக் கொடுப்பதாக சிம்பு வாய்வழியான உத்திரவாதத்தை  கொடுத்தாராம்.


ஆனால் அதை அப்படியே காற்றில் பறக்க விட அதுதான் இப்போது பூதாகரமாக கிளம்பியிருக்கிறது.  இடையில் சிம்புவுக்கு ரெட் கார்டும் விதிக்கப்பட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிம்பு கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமிட் ஆகியிருந்தார்.

ஐசரி கணேஷ் பிரச்சினையால் அந்தப் படம் அப்படியே கிடக்கிறது. இந்த நிலையில் கமலை வைத்து மணிரத்தினம் ஒரு படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் படத்தில் சிம்புவை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்கவும் மணிரத்தினம் நினைத்திருந்தார்.

இப்போது என்ன பிரச்சினை என்றால் தேசிங்கு பெரியசாமி படத்திற்காக சிம்பு நீண்ட தாடியுடன் இருக்க வேண்டியிருக்கிறது. மணிரத்தினம் படத்தில் தாடி மீசை இல்லாமல் இருக்க வேண்டுமாம். இதை எப்படி சிம்பு சமாளிப்பார் என்று பேசி வருகிறார்கள்.


இதற்கெல்லாம் மேலாக ஐசரி பிரச்சினை முடிய வேண்டும். அதன் பிறகு தேசிங்கு பெரியசாமி படத்தை ஆரம்பித்து விடுவார். அந்த பக்கம் மணிரத்தினமும் கமலை வைத்து திட்டமிட்டபடி படத்தை தொடங்கிவிடுவார். என்ன செய்வார் சிம்பு என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிம்புவின் நீண்ட நாள் ஆசை வேறு மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement