• Jul 24 2025

குடும்பத்தினரால் ஏமாற்றப்படும் மீனா- அசிங்கப்பட்டு நிற்கும் ஜுவா- விறுவிறுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ்! ப்ரோமோ இதோ.!

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கூட்டு குடும்பத்தின் அருமையை விளக்கும் விதமாக ஒரு நாடகம் ஒளிபரப்பாக வருகிறது என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். பாசமான அண்ணன் தம்பிகள் நால்வரின் கதையை இது ஒளிபரப்பி வருகிறது.

 தற்போது வீடு வாசல் என அனைத்தையும் இழந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாவது தம்பியான கதிரின் வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அறைகள் கூட இல்லாத வீட்டில் ஒரே ரூமில் வசித்து வரும் இந்த குடும்பத்தின் மருமகள்கள் அடுத்தடுத்ததாக கர்ப்பமாகி வருவது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

 கதிரின் மனைவி முல்லை, கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா இருவரும் முதலில் கர்ப்பமாக இருந்தனர். அந்த வரிசையில் மூர்த்தியின் மனைவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் நாடகத்தில் கதையில்லை என்றால் முடித்து விடுங்கள் இப்படி மோசமாக கதையை கொண்டு செல்லாதீர்கள் என்று விமர்சிக்க தொடங்கினர்.


 இருந்தபோதிலும் கதை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மூர்த்தி, கண்ணன், கதிர் ஆகியோர் தாங்கள் சம்பாதித்துக் கொண்டு வந்த பணத்தை அண்ணி தனத்திடம் கொடுக்கின்றனர்.அந்த சமயம் பார்த்து கண்ணன் ஜீவாவை பார்த்து நாங்கள் எல்லாம் கொடுத்து விட்டோம், நீ உன் பணத்தை கொடு என்று கேலியாக கேட்கிறார். 

ஆனால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மட்டும் பார்த்துக் கொள்வதால் அவருக்கு சம்பளம் ஏதும் கிடைப்பதில்லை. அது தெரிந்தும் கண்ணன் இவ்வாறு கூறுகிறார், அதனால் மீனா கடுப்பாகிறார். அதற்கு அடுத்தபடியாக முல்லை ஐஸ்வர்யாவிடம் சென்று, கண்ணன் முதல் சம்பளம் வாங்கி விட்டார். எங்களுக்கு ட்ரீட் கொடு என்று கேட்கிறார். 

அதற்கு ஐஸ்வர்யா சீக்கிரமே ட்ரீட் வைத்து விடுகிறேன் என்று சொல்கிறார். அப்போது குறுக்கிட்ட மீனா அனைத்து பணத்தையும் வீட்டில் கொடுத்துவிட்டு எங்கிருந்து ட்ரீட் வைப்பாய் என்று கேட்க, சம்பளம் 40,000 ஆனால் நாங்கள் 17,000 மட்டுமே வீட்டில் கொடுப்போம் மீதி பணத்தை நாங்களே வைத்துக் கொள்வோம் என்று கூறுகிறார். இதனால் மீனா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement