• Jul 23 2025

அனைவர் முன்பும் இங்கிலீஸில் பேசிய பாக்கியா.. புகழ்ந்து தள்ளிய பழனிச்சாமி.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் தொடர்ந்தும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதில் பாக்கியா இங்கிலீஸ் கிளாஸ் ஒன்றில் சேர்ந்திருக்கின்றார்.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் பழனிச்சாமி பைக்கில் போன் பேசியபடி வந்த பாக்கியாவை இடித்து விழுத்துகின்றார். பின்னர் பாக்கியாவின் பைக்கை நிமிர்த்தி கொடுத்து விட்டு "இப்படி ஓயாமல் போன் பேசிட்டு வராதீங்க, அப்புறம் நிமிர்த்த நான் தான் வரணும்" எனக் கூறுகின்றார்.


அதனைத் தொடர்ந்து மறுபுறம் பாக்கியா இங்கிலீஸ் கிளாஸிற்குள் நுழைகின்றார். பாக்கியாவைப் பார்த்ததும் பழனிச்சாமி இவங்க எங்க இங்க அப்படி என்று தனது மனதிற்குள் எண்ணுகின்றார். 

பின்பு கிளாஸ் டீச்சர் பாக்கியாவை எழுப்பி உங்களை அறிமுகப்படுத்துமாறு கூறுகின்றார். அதற்கு பாக்கியா இங்கிலீஸ் தெரியாமல் தட்டுத் தடுமாறி பேசுகின்றார். அதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்கின்றார்கள். 


அதற்கு உடனே பழனிச்சாமி "எல்லாரும் நிறுத்துங்க, நாம எல்லாரும் இங்கிலீஸ் கத்துக்க தானே வந்தோம், அவங்க முயற்சியாவது செய்றாங்களே" எனக் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது பாக்கியாவை பார்த்து "ஏனுங்க நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க பேசுங்க" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement