• Jul 25 2025

தனம் பற்றிய அனைத்து உண்மைகளையும் போட்டுடைத்த மீனா- கதறி அழுத முல்லை- இனி நிகழப்போவது என்ன?- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கியதால் பொலிஸ் கண்ணனை அரஸ் செய்து இப்போது தான் ரிலீஸ் செய்து உள்ளனர். இதனால் குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லோரும் கடும் சோகத்தில் இருக்கின்றனர்.

மறுபுறம் தனம் தனக்கு கான்சர் நோய் இருப்பதை வீட்டில் எல்லோரிடமும் எப்படி சொல்வது என்று தெரியாமல் நினைத்து நினைத்து தவிக்கின்றார்.மீனாவும் இதனை எப்படியாவது வீட்டில் சொல்லி தனத்திற்கு ரீட்மென்ட் செய்யனும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முல்லை மீனாவிடம் சென்று நீங்களும் தனம் அக்காவும் என் கிட்ட எதையோ மறைக்கிறீங்க. அக்கா மேல உங்களுக்கு உண்மையான பாசம் இருந்தால் என்ன என்று சொல்லுங்க என்று கேட்க மீனா அழுதுகொண்டே அக்காவுக்கு மார்புப் புற்று நோய் என்று சொல்கின்றார்.

இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது. முல்லை கதிரிடம் சொல்லுவாரா அல்லது மீனாவைப் போல இவரும் உண்மையை மறைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement