• Jul 24 2025

கரிகாலனோடு ரொமான்ஸ் பண்ணும் ஆதிரை... இது என்னடா புது டுவிஸ்டா இருக்கு.. கீரியும் பாம்புமாக இருந்திட்டு இப்போ இப்படி இருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் அவர் காதலித்து வந்த அருணை விடுத்து கரிகாலனுடன் கட்டாய திருமணம் நடந்து முடிந்துள்ளது.


இப்படியான நிலையில் சீரியலில் கீரியும், பாம்புமாக அடித்துக் கொண்டாலும், ஆஃப் த ஸ்க்ரீனில் ஆதிரையும், கரிகாலனும் கலகலப்பான கேரக்டர்கள் தான். இந்நிலையில் சர்வம் படத்தில் வரும் ஆர்யா - த்ரிஷா பேசும் வசனங்களை ரீல்ஸ் செய்து ஆதிரை வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.


Advertisement

Advertisement