• Jul 24 2025

‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் நடிகை சசிலயா, தங்கைக்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… அச்சு அசல் உங்கள போலவே இருக்காங்க மேடம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

Youtube மூலமாக பிரபலமாகி சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதன்படி youtube தளத்தில் ஊக்கமூட்டும் பேச்சுகளை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சசி லயா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய வாழ்க்கையை பேஸ்புக்கில் இருந்து தான் தொடங்கினார்.

இவர் ஆரம்பத்தில் சில மோசமான கருத்துக்களை எதிர்கொண்டாலும் தற்போது நேர்மறையான கருத்துக்களை பெற்று வருகிறார். இவரின் வீடியோக்களை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அதே சமயம் பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக இவர் பங்கேற்று வருகிறார். இவரின் இந்த வெற்றிக்கு முழு காரணம் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு மட்டும்தான். இவர் சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சமீபத்தில் முடிந்த பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இதனைத் தவிர தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசுரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. இவரைப் போலவே இவரின் தங்கையும் ஒரு நடிகை தான். அதாவது விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவு பெற்ற ராஜா ராணி சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா தான் இவரின் உடன் பிறந்த தங்கை.

தற்பொழுது  நடிகை சசிலயா தனது தங்கைக்கு அழகான நாய்க்குட்டி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதனை இணையத்தில் விடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை சசிலயாவின் தங்கையா இவர் ? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement