• Jul 26 2025

மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்'- ஆர்ஜென்டினா அணியை பாராட்டித் தள்ளிய பிரபல இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நேற்றைய தினம் நடைபெற்ற FIFA உலககோப்பை 2022ன் இறுதி ஆட்டத்தை உலகில் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்டு ரசித்தனர். மெஸ்ஸி கோல் அடித்ததில் இருந்தே இந்த போட்டியில் ஆர்ஜென்டினா தான் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், திடீரென வந்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை ஷூட் அவுட் முறைக்கு கொண்டு சென்றார். கடைசி நேர ட்விஸ்ட்டாக அர்ஜென்டினா ஷூட் அவுட் முறையில் 4 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், பிரபலங்கள் பலரும் மெஸ்ஸியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது தமிழில் பிரபல இயக்குநரான மிஷ்கினும் மெஸ்ஸிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். முழுமையாக மெஸ்ஸியை பாராட்டி புகழ்ந்துள்ள மிஸ்கின் கடைசி வரியில் 'அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்' என்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும் இவரது இயக்கத்தில் பிசாசு 2 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படத்திலும் கதாநாயகியாக ஆண்ட்ரியா தான் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement