• Jul 24 2025

கார்த்தியின் அடுத்த படத்தில் MGR..? டைட்டில் இது தானா? வெளியான மாஸ் தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அதன் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை நலன் குமாரசாமி இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கார்த்தி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி, எம்ஜிஆர் ரசிகராக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’ரத்தத்தின் ரத்தமே’ அல்லது ’வா வாத்தியாரே’ போன்ற டைட்டில்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் MGR ரசிகராக நடித்துள்ள நிலையில் கார்த்தியும் அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement