• Jul 26 2025

கண்ணு ரெண்டும் கூசுதுங்க...கண்ணாடி சேலையில் மில்கி உடம்பை கவர்ச்சி காட்டும் சமந்தா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது குஷி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதுதவிர நடிகை சமந்தா நடித்துள்ள சகுந்தலம் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். குணசேகரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இதன் புரமோஷன் பணிகளை தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ பெடம்மா தல்லி கோயிலில் பூஜை செய்து சகுந்தலம் படத்தின் புரமோஷன் வேலைகளை தொடங்கினர். இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா, இப்படத்திற்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது  புடவையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கண்ணாடி போல் இருக்கும் அந்த புடவையில் சமந்தா கொள்ளை அழகுடன் உள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement