• Jul 25 2025

"யார் அந்த ஊமை அரசி?"- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அசத்தல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 இயக்குநர் மணிரத்னம்  திரை பயணத்தில் மணிமகுடுமாக அமைந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக பிளாக் பஸ்டர் ஹிட்டானது. 

பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் அகநக பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வருகிற மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்ட ஊமை அரசி கதாபாத்திரத்தை குறிப்பிட்டு குந்தவை கதாப்பாத்திரம் "யார் அந்த ஊமை அரசி?" எனக் கேட்கும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த புரோமோ வீடியோ இதோ…


Advertisement

Advertisement