• Jul 25 2025

‘தரமான சம்பவமா இருக்கும்னு அடிச்சி புடிச்சி மைதானத்துல மேட்ச் பார்க்க வந்தா இவனுங்க’ – மோகன் ஜியின் வைரல் பதிவு...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக நான்கு ஓவர்களை வீசிய ஜடேஜா 22 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகச்சிறப்பான முறையில் 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 138 ரன்கள் குவித்து ஏழ விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்துவீச்சின் போது அபிஷேக் சர்மா, ராகுல் திரிப்பாதி மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண ஏனெற்ற பிரபலங்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து இருந்தனர். அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் தனது மனைவி துர்காவுடன் வந்து இருந்தார்.

அதே போல அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகளுடன் வந்து இந்த ஆட்டத்தை கண்டு களித்தார். இவர்களுடன் ஷாலினியின் சகோதரர் ரிஷி மற்றும் சகோதரி ஷாமிலியும் இந்த போட்டியை காண வந்து இருந்தார்கள். இவர்கள் மட்டுமல்லாது. தனுஷ், காமெடி நடிகர் சதிஷ், பிரியங்கா மோகன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த போட்டியை நேரில் கண்டு களித்தனர்.

அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜியும் இந்த போட்டியை காண நேரில் சென்று இருக்கிறார். மைதானத்தில் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள மோகன் ‘தரமான சம்பவமா இருக்கும்னு அடிச்சி புடிச்சி மைதானத்துல மேட்ச் பார்க்க வந்தா இவனுங்க சப்பையா முடிச்சி விடுறானுங்க’ என்று பதிவிட்டுள்ளார். மோகனின் இந்த பதிவை கண்ட பலரும் எப்படி உங்க படம் மாதிரியா என்று கேலி செய்து வருகின்றனர் .


Advertisement

Advertisement