• Jul 25 2025

பிரபல நடிகையின் வாய்ப்பை தட்டிப் பறித்த நயன்தாரா- ரஜினிகாந்த் சொன்ன ஆறுதல்- இப்படியொரு சம்பவம் நடந்திருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா.இந்நிலையில், நடிகை நயன்தாராவால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதாக நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், 2008 ஆம் ஆண்டு வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் நானும் நடித்திருந்தேன். பாடல் காட்சி ஒன்றுக்காக என்னை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இதற்கான படப்பிடிப்பு 4, 5 நாட்கள் நடந்தது. ரஜினி சாருடன் நான் நடித்த காட்சியை திரையில் பார்க்க ஆவலாக இருந்தேன்.

ஆனால் படம் வெளியான போது படத்தில் அந்த காட்சியே இல்லை, இதனால், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அப்போது தான் இந்த படத்தில் வேறு ஒரு நடிகை நடித்தால், நான் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா பிரச்சனை செய்ததாகவும், இதனால், படக்குழு வேறு வழியில்லாமல் அந்த காட்சியை நீக்கிவிட்டதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். மேலும், இந்த படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த் தொலைபேசியில் நன்றி கூறினார் அது மட்டும் தான் எனக்கு கிடைத்த ஒரே ஒரு ஆறுதல் என்றும் கூறினார்.


குலேசன் படத்தில் நடித்த போது எடுத்த போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார். இணையத்தில் இந்த பேட்டி வைரலானதை அடுத்து, நயன்தாராவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீங்கள் வளர்ந்த நடிகை நீங்கள் இப்படி செய்யலாமா என்றும், நயன்தாரா நீங்கள் இப்படி பட்டவரா என்றும் ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டுவருகின்றனர்.


மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் தமிழிலும் விஷாலுடன் சிவப்பதிகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், தடையற தாக்க, குரு என் ஆளு, எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். புற்று நோயில் இருந்து மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ், சமீபத்தில் நடிகை சமந்தா போல, விட்டிலிகோ என்ற தோலின் நிறத்தை இழக்கும் சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement