• Jul 25 2025

வீட்டிற்கு தெரியாமல் தனத்திற்கு ரீட்மென்ட் செய்ய முல்லையும் மீனாவும் போட்ட பிளான்- மறைந்து நின்று கேட்ட மூர்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெற உள்ளது என்று பார்ப்போம்.

முல்லையும் மீனாவும் தனத்தை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். அங்கே டாக்டரிடம் தனத்தின் நிலைமை பற்றி விசாரிக்க டாக்டர் இன்னும் இரண்டு நாள்ல இவங்களுக்கு சிசேரியன் பண்ணியே ஆகனும் என்று சொல்கின்றார். அதற்கு தனம் இன்னும் ஒரு மாதம் மட்டும் டைம் தாங்க என்று சொல்ல டாக்டர் அதெல்லாம் முடியாது இப்பவே லேட் ஆகிட்டு சீக்கிரமா பண்ணியே ஆகனும் என்கின்றார்.

இதைத் தொடர்ந்து வீட்டில் கண்ணன் ஐஸ்வர்யாவோடு இருந்து பேசிக் கொண்டிருக்கிறார். நான் வீட்டில எவ்வளவு தப்பு பண்ணியிருக்கிறேன். அதெல்லாம் மறந்து என்னை திரும்ப சேர்த்துக்கிட்டாங்க, அம்மா செத்ததற்கு நான் தான் காரணம் ஆனால் வீட்டில என்னை திரும்ப ஏத்துக்கிட்டாங்க இது மாதிரி தப்பை இனிமேல் பண்ணவே கூடாது என்று ஐஸ்வர்யா கிட்ட பேசிட்டு இருக்கிறார். இதனை மூர்த்தி ஒளிந்து நின்று கேட்கின்றார்.


அதனை அடுத்து கோயிலில் தனம் முல்லை மீனா எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கின்றனர். அப்போது தனம் என்னால அவசரப்பட்டு சிசேரியன் பண்ண முடியாது மாமாவ கஷ்டப்படுத்த முடியாது. சின்ன விஷயம் என்றாலே அவரு தாங்க மாட்டாரு. என்னால அவரு நிம்மதியை கெடுக்க முடியாது என்கின்றார்.

அப்போது முல்லை அவங்களை கஷ்டப்படுத்தாமலே நாம ஒரு ஐடியா பண்ணுவோம். இரண்டு நாள்ல பிரசவ வலி வந்த மாதிரி நடியுங்க, நாங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் அங்க மிச்ச விஷயத்தை நாங்க பார்த்துக்கொள்ளப் போகின்றோம் என்று சொல்கின்றார்.முதலில் மறுத்த தனம் பின்னர் ஓகே சொல்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் குழந்தையை வைத்து விளையாடுகின்றனர். அப்போது அதைப் பார்த்த கதிர் முல்லையிடம் சென்று ஐஸ்வர்யாவுக்கு குழந்தைகளை எப்படி வைத்து கொஞ்சுவது என்ற விஷயத்தை சொல்லிக் கொடு என்கின்றார்.அப்போது முல்லை சோகமாக கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement