• Jul 25 2025

இந்த வாரம் டிஆர்பி-யில் கலக்கும் டாப் 10 சீரியல்கள் - முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.


இதில் வழக்கம் போல் சன் டிவியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. இதில் 10-வது இடம் சன் டிவியின் அன்பே வா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக முன்பெல்லாம் டாப் 5 இடத்தில் இருக்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

8-வது இடம் புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற சீரியலுக்கு கிடைத்துள்ளது. 

7-வது இடம் அதிரடியும் சுவாரசியமும் குறையாத சுந்தரி சீரியலுக்கும், 6-வது இடம் புத்தம் புது சீரியலான மிஸ்டர் மனைவி என்ற சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 4-வது மற்றும் 5-வது இடம் சன் டிவியின் இனியா மற்றும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது.

3-வது இடம் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தில் அழகாக காண்பிக்கும் வானத்தை போல சீரியலுக்கும் கிடைத்துள்ளது. 2-வது இடம் குணசேகரின் நக்கல் நையாண்டிக்கு குறைச்சல் இல்லாத எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 

கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்து மாஸ் கட்டுகிறது. இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

Advertisement

Advertisement