• Jul 26 2025

கதிரை வெளியில் எடுக்க பணத்திற்கு ஓடித் திரியும் மூர்த்தி- ஜனார்த்தனன் எடுத்த முடிவு- மகிழ்ச்சியில் மீனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி பணத்திற்காக எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு திரிய ஒருவர் வந்து 1 லட்சம் பணத்தை கொடுத்து இவ்வளவு தான் கிடைத்தது என்கின்றார். அதைத் தொடர்ந்து தனம் போன் பண்ணி மூர்த்தியை அவசரமாக வரச் சொல்ல மூர்த்தியும் கிளம்பிச் செல்கின்றார். தொடர்ந்து தனத்திடம் என்ன ஏது என்று விசாரிக்க தனம் மூர்த்தியிடம் தன்னுடைய நகைகளை அடைவு வைத்து காசினைக் கட்டச் சொல்கின்றார்.


ஆனால் மூர்த்தி இன்னும் சில பேர் கிட்டை கேட்டிருக்கேன் அவங்க தரல என்றால் நகையை அடைவு வைச்சிரலாம் என்று சொல்கின்றார். பின்பு ஜனார்த்தனன் ஊரால் வந்ததும் அவருடைய மனைவி கண்ணனால் கதிர் ஜெயிலுக்குள் இருக்கும் விடயத்தைச் சொல்கின்றார். பின்னர் ஜீவவிடம் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்களா என கேட்கின்றார்.

பின்னர் உங்க குடும்பம் வேற எங்க குடும்பம் வேறைய எதுக்க பிரிச்சுப் பார்க்கிறீங்க என்று கேட்கின்றார். முதலில் மறுப்புத் தெரிவித்த ஜீவா பின்னர் மாமனார் கூறிய பாச வார்த்தைகளைக் கேட்டு பணத்தை உள்ளே வாங்கிக் கொண்ட செல்கின்றார். இதைப் பார்த்த மகிழ்ச்சியில் மீனா இருக்க அவருடைய அம்மா அப்பாவைப் பார்த்தியா உனக்கு எப்போதும் நல்லது தான் நினைப்பார் என பெருமையாகப் பேசுறார்.


பின்னர் கதிரை பார்த்து கண்ணன் மன்னிப்புக் கேட்பதோடு போலீஸிடம் சென்று கதிரை வெளியே விடும் படி கெஞ்சுகின்றார். இதனால் போலீஸ் தங்களுக்கு சாப்பாடு வாங்கித் தரச் சொல்ல கண்ணன் பணம் இல்லாமல் முழிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement