• Jul 24 2025

திடீரென கடையை காலி பண்ணும் மூர்த்தி...மீனாவின் அப்பாவிற்கு எதிராக கிளம்பிய அண்ணன் தம்பி..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 

அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் எண்ணிய நிலையில் தற்போது பரபரப்புடன் ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில்  அதிரடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வந்து இறங்கிறார்கள் அரச அதிகாரிகள்.  நீங்க சூப்பர் மார்க்கெட் கட்டியிருக்கின்ற இடம் விவசாய நிலம் ...இதில் கமர்சியல் பில்டிங் கட்டக்கூடாது என்று தெரியாதா...உடனே கடையை காலி பண்ணி ஆகிடனும் என சொல்ல மூரத்தி ,கதிர், ஜீவா அதிர்ச்சியடைகின்றனர்.

இதனைக் கேட்டு அவர்களும் கடையை காலி பண்ணுகிறார்கள்.இந்த நேரம் மீனாவின் அப்பா கடையை காலி பண்ணுவதை பார்த்து ரசித்து விட்டு செல்கின்றார்.

இதனால் கோபமடைந்த கதிர் மற்றும் ஜீவா உடனடியாக வந்து அவரின் காரை மறித்து சவால் விடுகின்றனர்.எங்க கடையை மூடலாம்...எங்க வீட்டை விட்டுக் கூட வெளியில் அனுப்பலாம்...ஆனா எங்க நாலு பேரையும் யாராலையும் பிரிக்க முடியாது என கூறுகின்றார்கள்.

எங்களை மட்டும் அல்ல எங்க வீட்டுக்கு வந்த உங்க பொண்ணு மீனாவையும் பிரிக்க முடியாது என கூறுகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement