• Jul 25 2025

ஜுவா மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்த மூர்த்தி- பக்கத்து வீட்டுக்காரர்களினால் வந்த புதிய பிரச்சினை

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் இருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் பெண் ஒருவர் சில பெண்களை கூட்டி வந்து முல்லை தனம் ஐஸ்வர்யா ஆகியோரைக் காட்டி இவங்க தான் கர்ப்பமாக இருக்கிறாங்க என்று கூறுகின்றார். தொடர்ந்து எப்போ வீட்டை காலி பண்ணுவீங்க என்று கேட்க அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.


இதனால் பயந்து போய் ஏன் என்று முல்லை கேட்க இந்த வீடு ராசியான வீடாக இருக்கு. என் நாத்தனாருக்கும் குழந்தை இல்லை அவரைக் கொண்டு வந்து குடிவைக்க தான் என்று சொல்ல இவர்கள் சிரிக்கின்றனர். ஒரு மாதிரி அவர்களிடம் பேச்சுக் கொடுத்து அனுப்பி வைத்து விடுகின்றனர்.

பின்னர் இரவு ஆகியதால் அனைவரும் ஒன்றாக இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் தனது முதல் மாத சம்பளத்தில் என்ன வாங்கித் தருவான் எனக் கேட்டு எல்லோரும் கலாய்க்கின்றனர். தொடர்ந்து கடை பற்றிய விடயங்களையும் சிரித்து சிரித்து பேசிட்டு இருந்தனர்.


தொடர்ந்து ஜுவா வெளியில் தனியாக இருக்க மீனா சென்று ஜுவாவுடன் கதைக்கின்றார்.மீனாவின் மாற்றத்தை பார்த்து ஜுவா ஆச்சரியமடைந்ததோடு இருவரும் ரொமான்ஸ் பண்ணுகின்றனர்.தொடர்ந்து விடிந்ததும் முர்த்தி கதிர் ஜுவா கண்ணன் ஆகியோர் வேலைக்கு கிளம்புவது பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

தொடர்ந்து ஹொட்டலுக்கு பொருட்கள் ஏற்ற வேண்டும் என்று கதிர் காரில் போகின்றார். அதே போல கண்ணனும் தன்னுடைய வண்டியில் கிளம்ப ஜுவா மட்டும் சாதாரண வண்டியில் செல்கின்றார். இதனை பார்த்த மீனாவின் அப்பா அதிர்ச்சியடைந்து ஜுவாவை பற்றி பேசுகிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement