• Jul 25 2025

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இசையமைப்பாளர் தேவா!- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மனசுக்கேத்த மன்னாரு என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் தேவா இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பணியாற்றி வந்த இவர் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றார்.

தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்

காத்தடிக்குது காத்தடிக்குது... காசிமேடு காத்தடிக்குது... திருப்பதி ஏழுமலை வெங்கடேசா... கவலைப்படாதே சகோதாரா... உள்ளிட்டப் பல பாடல்களை இன்றும் பட்டித்தொட்டியெல்லாம் அவ்வப்போது கேட்க முடிகிறது. சமீபத்தில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய 'ஜித்து ஜில்லாடி' பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதில், வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார். தேவாவின் பிறந்தநாளான நேற்று அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளதால் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.



Advertisement

Advertisement