• Jul 25 2025

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம்... வெளியானது "800" ரிலீஸ் திகதி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கடினமான  வாழ்க்கை வரலாற்றை தொகுத்து படமாக உருவாகி உள்ள திரைப்படம் "800".  இப்படம் குறித்து ரிலீஸ் திகதி வெளியாகி உள்ளது. 


புகழ்பெற்ற இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவின் கதை மற்றும் உரையாடல் உதவியுடன் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இத்திரைப்படத்தில் மதுர் மிட்டல், முரளிதரனாக நடித்துள்ளார், மேலும் நாசர், நரேன், வேல ராமமூர்த்தி, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


முத்தையா முரளிதரன் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தார், ஆனால் அவரது குடும்பம் உள்நாட்டுப் போரின் போது இலங்கைக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களின் புதிய வீட்டில், அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர், ஆனால் முரளிதரன் கிரிக்கெட்டில் ஆறுதல் கண்டார் தொடக்கத்திலிருந்தே தனது பந்துவீச்சுத் திறமையால் மூத்த வீரர்களை அவர் ஆதிக்கம் செலுத்தினார். இவ்வாறானதொரு கதையை மையமாக கொண்டே இந்த திரைப்படம் எடுக்க பட்டுள்ளது.  


இத்திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  நிலையில்  அக்டோபர் 6, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகா உள்ளது. இந்தப் படம் தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பிராந்திய மொழிகள் உட்பட பல மொழிகளில் வெளியிடப்படும்.


 "800" திரைப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 5 ஆம் தேதி மும்பையில் சச்சின் டெண்டுல்கரால் வெளியிடப்பட்டது. முரளிதரனின் வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை முன்னிலைப்படுத்திய டிரெய்லர், மேலும் இது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "800'' திரைப்படம் வெளிவருவதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் ரசிகர்கள். 



Advertisement

Advertisement