• Jul 24 2025

பிக்பாஸ் ஷோவைத் தப்புத் தப்பாகப் பேசிய கூல் சுரேஷ்... வச்சு செய்வதற்காகத்தான் உள்ளே எடுத்தார்களா... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 7 நேற்று முன் தினம் ஆரம்பமானது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்புள்ளது.


இந்த சீசனில் 18பேர் கலந்து கொண்ட நிலையில் தற்போது சினிமாவில் வாய்ப்பில்லாமல் திரைப்பட ப்ரொமோஷன் நிகச்சிகளில் பங்கேற்று வந்த கூல் சுரேஷும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். கன்டெண்ட் கண்டெய்னரான கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிலும் செம்ம என்டர்டெயினராக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் முன்னர் ஒருமுறை கூல் சுரேஷ் பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் தப்பாக கூறிய வீடியோவை ஷேர் செய்து வரும் ரசிகர்கள் "இதுதான் கூல் சுரேஷின் உண்மை முகமா" எனக்கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது பிக்பாஸ் ஷோவைப் பற்றித் தப்பாக பேசியும் விஜய் டிவி கூல் சுரேஷை உள்ளே இறங்கியிருப்பது கூல் சுரேஷை வச்சு செய்வதற்கு தான் எனவும் கூறி வருகின்றனர்.