• Jul 24 2025

என்னோட பாய் பிரண்டு இப்படி மட்டும் தான் இருக்கணும்- ஓபனாகப் பேசிய பொன்னி சீரியல் கதாநாயகி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே டிக் டாக் மூலம் பிரபலமானவர் வைஷு சுந்தர். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 என்ற சீரியல் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பொன்னி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் வைஷு சுந்தர் சென்னை தி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்து அவர்களது விமர்சனங்களை கூறியுள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்டில் இணைந்துள்ளார் வைஷு சுந்தர்.


ஷாப்பிங்கில் மஞ்ச கலர் புடவைகளை பார்த்து மை ஃபேவரைட் கலர் என கூறியுள்ளார். விதவிதமான ஆடை, ஆபரணங்கள், விளையாட்டு பொருட்களை பார்த்து ஷாப்பிங் செய்துள்ளார். பார்வதி என்ற கேரக்டருக்கும் பொண்ணு என்ற கேரக்டருக்கும் தேவையான ஆடைகளை வாங்கி குவித்துள்ளார்.


மேலும் இந்த ஷாப்பிங்கின் போது உங்க பாய் பிரண்டு எப்படி இருக்கணும் என கேட்டதற்கு சாக்லேட் பாயாகவும் இருக்கணும் ரக்கெட் பாயாகவும் இருக்கணும் என தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னிடம் சாக்லேட் பாயாகவும் வெளியில் ரக்கெட் பாயாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இவருடைய ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement