• Jul 25 2025

“ திடீர்னு ஒரு அழைப்பு ..” எமோஷ்னலாக பதிவு ஒன்றை பதிவிட்ட அறந்தாங்கி நிஷா..நடந்தது இது தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா.

 காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதாவது தனது மகளுடன் இணைந்து புகைப்படத்தை பதிவிட்டு ..“இந்த வருடம் நிறைய பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக போய்கிட்டே இருந்தேன், திடீர்னு ஒரு அழைப்பு அறந்தாங்கியில் என்னோட பொண்ணு படிக்கிற பள்ளியில Eurokids சிறப்பு அழைப்பாளரா நீங்க வரணும்னு கூப்பிட்டாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது நான் மட்டும் இல்ல என்னுடைய கணவரும் சிறப்பு அழைப்பாளரா அழைச்சிருந்தாங்க. 

இதுவரைக்கும் பள்ளியில நான் எந்த பரிசு வாங்கினதே கிடையாது ஆனால் நிறைய பள்ளிகளுக்கு பரிசு கொடுப்பதற்கு இப்ப நான் போய்கிட்டு இருக்கேன், அந்த வகையில என் பொண்ணு என் கையால பரிசு வாங்கும் போது தனி சந்தோஷமாக இருந்தது. என்னையும் என் கணவரையும் என் குடும்பத்தையும் கௌரவப்படுத்திய என் மண்ணிற்கும், Eurokids பள்ளிக்கும் சகோதரி கவிதா சரவணனுக்கும் நன்றி.....” என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு...




Advertisement

Advertisement