• Jul 26 2025

என் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது - மனம் திறந்த பாடகி ராஜலட்சுமி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி. தற்போது, இருவரும் காதல் திருமண வாழ்க்கை குறித்து  மனம் திறந்து பேசியுள்ளனர். அதில், சொந்த ஊரான திண்டுக்கல் மீது அளவுக்கு அதிகமாக பாசம்.

அத்தோடு எந்த இடத்தில் வண்டியில் சென்றாலும் கூட அவருடைய ஊர் பெயர் போட்ட பஸ்ஸை பார்த்தாலே ஒரு நிமிடம் அந்த இடத்தை நின்று பார்ப்பேன். திருமணத்திற்கு முன்பே செந்தில் கணேஷ் இடம் நாம் திருமணத்திற்கு பின்னர் திண்டுக்கல்லில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். உனக்கு அங்கே ஒரு வீடு கட்டித் தருகிறேன் என்றார்.

ஆனால் அது பல வருடங்களாக நடக்கவே இல்லை. தற்போது குழந்தைகளுக்காக திண்டுக்கல்லில் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி முடித்துள்ளார். திருமணத்தின் போது ஆரம்பத்தில் ஊர்காரர்கள இந்த பொண்ணு இந்த ஊரில் இருந்து அந்த ஊருக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டு போயிருக்கிறது.

இனி எப்படியும் கஷ்டப்படும் என்று நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்து வெற்றி அடைவதை பார்த்து பலரும் பாராட்டினர். அத்தோடு நாங்கள் ஆசைப்பட்டதை எல்லாம் எங்களுக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்ட மாதிரி எங்களுடைய குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இப்போது இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement