• Jul 26 2025

ஓப்பனாக கூறிய குணசேகரன்... அதிர்ச்சியில் விசாலாட்சி... நறுக்கென கேள்வி கேட்ட ஜனனி... 'எதிர்நீச்சல்' இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. அதாவது குணசேகரன் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் ஏமாற்றி அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீதம் ஷேர் எழுதி வாங்கிய விஷயம் மற்றவர்களுக்கும் தெரிய வந்தது. 


இவ்வாறு இருக்கையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவருடைய சொத்துக்களை விசாலாட்சியின் பெயரில் எழுதி வைக்க சொல்ல "உன்னை எனக்கு சமமா கொண்டு வர விருப்பம் இல்லமா ஏற்கனவே இடம் கொடுக்காமல் இங்கே நிறைய பேர் ஆடிட்டு இருக்காங்க" என குணசேகரன் ஓப்பனாக கூறுகின்றார்.


அதற்கு ரேணுகா "பொம்பளைங்கனா உங்களுக்கு அவ்வளவு மட்டமா போயிடுச்சா" என குணசேகரனிடம் நறுக்கென கேள்வி கேட்கிறார். பின்னர் ஜனனி "இப்ப தெரியுதா உங்க பிள்ளையோ பித்தலாட்டம்.. இப்போ என்ன பண்ண போறீங்க" என விசாலாட்சியிடம் கேட்கின்றார்.  அதற்கு விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement