• Jul 25 2025

என்னுடைய கணவரைப் பார்த்து தாத்தாவானு கேட்கிறாங்க- மனம் நொந்து பேசிய நடிகை நீலிமா ராணி- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையிலும்... வெள்ளி திரையிலும் நடித்து பிரபலமானார் நீலிமா ராணி. இவர் சமீபத்திர்   கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், கண் கலங்கியபடி... தன்னுடைய கணவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீலிமா ராணி, நீண்ட இடைவெளிக்கு பின்னர்... சமீபத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் பொன் குமார் இயக்கத்தில் வெளியான ஆகஸ்ட் 16 1947 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் 5 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கேரக்டர் தனக்கு கிடைத்தது குறித்து நீலிமா பேசும் போது, இயக்குநர் பொன் குமார், நான் எடுத்த கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்து விட்டு என்னை அணுகினார். மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என கூறினார். எத்தனை நாள் கால்ஷீட் என கேட்டபோது, ஒரு ஒரு நாள் போதும் என கூறி ஷாக் கொடுத்தார்.


என்னுடைய அந்த ஒரே ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக எனக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் காத்திருந்த இயக்குநர், நான் ஷூட்டிங்கிற்கு சென்ற போது அரை நாளிலேயே என்னுடைய காட்சியை எடுத்து முடித்து விட்டார். இந்த சிறு கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, உண்மையில் ஏதோ சாதித்தது போன்ற உணர்வை தருகிறது என பூரித்து பேசியுள்ளார்.

Advertisement

Advertisement