• Jul 25 2025

நீலாம்பரியாக நடிப்பதற்காக ரஜினியிடம் சண்டை போட்ட பிரபல நடிகை... பேசி சமாதானப் படுத்திய பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய தீவிர ரசிகர்களுக்கும், 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் இன்றும் அவர்களின் ஃபேவரட் திரைப்படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படம் 'படையப்பா'.


அந்தவகையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் ஒரு பவர்ஃபுல் வில்லியாக, தமிழ் சினிமாவில் இருந்த வில்லன்களை எல்லாம் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஒரே படத்தில் தூக்கி சாப்பிட்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.


அவரை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்கவே முடியாது என்ற அளவிற்கு சிறப்பாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.


இன்னொரு சுவாரஷ்யமான விடயம் என்னவெனில் இந்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பேன் என நடிகை மீனா ரஜினியிடம் சண்டைபோட்டு கேட்டாராம். ஆனால், ரஜினிகாந்த் அந்த கதாபாத்திரத்திற்கு வில்லத்தனமான முகம் வேண்டும், உன்னுடைய முகம் குழந்தை போல் இருக்கிறது என மீனாவிடம் கூறி இருக்கின்றார் ரஜினிகாந்த்.


இருப்பினும் அதை எதையுமே கேட்காத மீனா தனக்கு நீலாம்பரி கதாபாத்திரம் தான் வேண்டும் என அடம்பிடித்தார். அதன் பின்னர் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரை விட்டு மீனாவிடம் பேச சொல்லி இந்த விஷயத்தை முடிவு கொண்டுவந்தார் ரஜினி.

படையப்பா படம் வெளியாகி பல ஆண்டுகளைக் கடந்தாலும் இந்த விடயமானது தற்போதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement