• Jul 25 2025

நான் எட்டி உதைச்சிட்டு போவன்... ரவுடியாடா நீ... அசீமுடன் மோதும் அமுது... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டது என்றால் அது 'பிக்பாஸ்' தான். இந்த நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. 

அந்தவகையில் 21 பெறுதுடன் ஆரம்பமாகி 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 7பேர் வெளியேறி தற்போது 14 பேர் மட்டுமே உள்ளார்கள்.


மேலும் நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இங்கு சண்டையும், வாய்க்கலப்புக்களும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்கள் அதிகளவில் சண்டை போட்டு வருகின்றனர். 

அந்த வகையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாடி வருகின்றார்கள். இந்த டாஸ்க் தொடங்கிய நேரத்திலிருந்து மோதல் தான் அதிகமாக இடம்பெற்று வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் அனைவரும் அசீமைத் திட்டுகின்றார்கள். அதாவது அசீம் அமுதவாணனைப் பார்த்து "ஏன் இவ்வளவு கேவலமாக, ஷீப்பாக விளையாடுறீங்க" எனக் கேட்கின்றார்.

அதற்கு உடனே அமுதவாணன் "யாராவது ஷீப்பு, கேவலம் என்று சொல்லி அசிங்கமாக பேசுவாங்களா, உனக்கு யார் இவ்வளவு றைற்ஸ் கொடுத்தது" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே விக்ரமன் "ரௌடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்க" எனக் கோபத்தில் கத்துகின்றார். 

மேலும் "கண்ணாடியில் நீ நிண்டால் எட்டி உதைச்சிட்டுப் போவன் எண்டுறியே, நீ என்ன ரவுடியா" எனவும் கேட்கின்றார் அமுதவாணன். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ சண்டையுடன் வெளிவந்து இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement