• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும்.. அந்த விஷயத்தில் குதித்த ராபேர்ட்... வெளியானது போஸ்டர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்நிகழ்ச்சியானது 5சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.


மேலும் ஏனைய சீசன்களில் விட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் சீசன்6 இல் என்றைக்குமே சண்டை சச்சரவிற்கு பஞ்சம் இருப்பதில்லை. 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிய வண்ணமே இருக்கின்றார்.


அவ்வாறான போட்டியாளராகளில் ஒருவரே ரொபேர்ட் மாஸ்டர். இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். வீட்டில் இருந்த போதே அதிகமாக எந்தஒரு விஷயத்திலும் ஈடுபாட்டுடன் இல்லாமல் இருந்தார். அதுமட்டுமல்லாது அதிகளவில் ரச்சிதாவின் பின்னாடி தான் சுற்றி இருக்கின்றார்.


இதனால் அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரியளவில் திருப்பமாக இல்லை. இந்நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தாண்டி தனது திரைப்பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் அவரின் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது அவரின் ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement