• Jul 25 2025

காதலனை கரம் பிடித்த சமந்தா... சந்தோஷத்தில் வாழ்த்துக்கூறிய நாக சைத்தன்யாவின் புதிய காதலி சோபிதா துலிபாலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சோபிதாவும், சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவும், காதலிப்பதாக சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உறுதி செய்துள்ளன.


இந்நிலையில் துலிபாலாவின் சகோதரி சமந்தாவும், டெல்லியை சேர்ந்த டாக்டர் சாஹில் குப்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தார்கள். தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணத் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை சோபிதா.


இந்தத் திருமணம் தொடர்பில் சோபிதா கூறுகையில் "இது வடக்கு தெற்கை சந்தித்த திருமணம். சாஹில் டெல்லியை சேர்ந்தவர். என் சகோதரி ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். ஒருவருக்கொருவர் அன்பாக இல்லாத இந்த உலகில் அதுவும் குறிப்பாக பெண்கள் அப்படி இருக்கும்போது எனது சகோதரியின் பாசத்தை உணர நான் கொடுத்து வைத்திருக்கிறேன். அவர் தான் விரும்பிய நபரை மணப்பதை பார்க்கவும் நான் கொடுத்து வைத்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் 'சமந்தா, சாஹில் திருமணத்தை பார்த்து நான் ரொம்பவே எமோஷனலாகிவிட்டேன். திருமண பந்தத்தின் மீதான என் நம்பிக்கையை அது மிகவும் அதிகரித்துள்ளது. இந்த திருமண விழா இரவு முழுக்க நடைபெற்றது. சுமார் 12 மணிநேரம் இது நடந்தது" என்றார்.


அதுமட்டுமல்லாது "அப்படி இருந்தும் போதிய பூஜைகள் செய்யவில்லை என என் அம்மா அதிருப்தியில் இருக்கிறார். மணமகனும், மணமகளும் ஹோம குண்டத்தில் குதித்துவிடலாமா என யோசித்தார்கள்" எனவும் தெரிவித்துள்ளார் நடிகை சோபிதா துலிபாலா.


Advertisement

Advertisement