• Jul 24 2025

நடிகருடன் நெருக்கமான காட்சிகள் தான் அதற்க்கு காரணம்... மனம் திறந்த நடிகை வாணி போஜன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை வாணி போஜன்.அத்தோடு இவர் நடிப்பில் அண்மையில் செங்கலம் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது.

அத்தோடு ஊர் குருவி, பாகைவனுக்கும் அருள்வாய், பாயுமொளி நீ எனக்கு, லவ் என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.


ஜி.வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேச்சிலர். மேலும் இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக வாணி போஜன் தான் நடிக்கவிருந்தாராம்.

ஆனால், அப்படத்தில் இடம்பெற்ற சில நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் காரணமாக தான் வாணி போஜன் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு, படத்திலிருந்து வெளியேறினாராம்.

நான் அந்த படத்தில் நடித்திருந்தால், எனக்காக அப்படத்தில் காட்சிகள் மாறியிருக்கும். எனக்காக எந்த காட்சியையும் இயக்குனர் மாற்றக்கூடாது. இயக்குனரின் சுதந்திரமும், கிரியேட்டிவிட்டியும் பறிபோகக்கூடாது.


அதனால் தான் நான் அப்படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார் வாணி போஜன்.



Advertisement

Advertisement