• Jul 25 2025

நகுல்-ஸ்ருதி தம்பதியினரின் குழந்தைகளா இது..? ரொம்ப அழகாக இருக்காங்களே.. வைரலாகும் ஹேர்கட் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் நகுல். தேவயானியின் தம்பி எனும் அடையாளத்தோடு சினிமாவில் உள் நுழைந்திருந்தாலும் 'காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம்' உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.


நடிகராக மட்டுமல்லாது பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களைக் கவர்ந்து சினிமாவில் படு பிசியாக இருந்து வந்த நகுல், தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


இத்தம்பதியினர் திருமணத்துக்குப் பிறகு இன்ஸ்டாவில் தங்களது காதல் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் மனங்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். இதனையடுத்து இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் பிறந்ததும் தங்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.


அந்தவகையில் தற்போது தங்கள் குழந்தைகள் இருவருக்கும் முதன்முறையாக மொட்டையடிக்கும் வீடியோவை ஸ்ருதி - நகுல் தம்பதியினர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியொ ஆனது படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement