• Jul 24 2025

இந்த நடிகர் ஓகே... அந்த விடயத்தில் அதிரடி முடிவெடுத்த ஜான்வி கபூர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனது நடிப்பு திறமையையை காட்டி டாப் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவர் தற்போது உயிருடன் இல்லை என்றாலும் இவரின் நடிப்பு திறமை தற்போது வரை பேசப்பட்டு வருகின்றது  உண்மை.

இவர் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளை பெற்றெடுத்தார். இவர் உயிரோடு இருக்கும் போது இரு மகள்களை அறிமுகப்படுத்தியதோடு சினிமாவில் நடிக்கவிடவில்லை ஸ்ரீதேவி. ஆனால் அம்மா இறந்த அடுத்த ஆண்டே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் மூத்த மகள் ஜான்வி கபூர்.


தடக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். எனினும் சமீபத்தில் வருண் தவானுடன் பாவல் என்ற படத்திலும் கமிட்டாகி நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷுடன் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் தீயாய் பரவி இருந்தது.

ஆனால் அதெல்லாம் பொய் தென்னிந்திய படங்களில் தன் மகள் கமிட்டாகவில்லை என்று ஜான்வி தந்தை போனி கபூர் தெரிவித்து இருந்தார். அத்தோடு விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசையென்றும் வாய்ப்பு கிடைத்தால் ஆடிஷனில் கலந்து கொள்ள விருப்பம் என்று ஜான்வி கபூர் பேட்டியில் கூறியிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், தனுஷ் படமெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்ட ஜான்வி தற்போது ஜூனியர் என் டி ஆர்-ன் 30 வது படத்தில் கொரடெல்லா சிவா இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜான்வி கபூர் அவரது சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement