• Jul 24 2025

கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு பிரபல கோயிலுக்குச் சென்ற நமீதா- என்ன விசேஷம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நமீதா. இதன்பின் ஏய், விஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து கோலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் நமீதா.


2010-ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக  வந்த நமீதாவின் கெரியர் அதன் பின் அப்படியே தலைகீழாக மாறியது. அவரது உடல் எடை அதிகரித்தது தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில ஆண்டுகள் இருந்து வந்தார்.


இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஒருசில படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. 


இந்நிலையில், நமீதா நேற்று தன்னுடைய 42 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். தனது கணவருடன் பிரபலமான கோயில் ஒன்றிற்குச் சென்று வழிபாடும் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்



Advertisement

Advertisement