• Jul 26 2025

ராகினியிடம் உண்மையை கேட்டு அறிந்து கொண்ட நடராஜன்- கதிகலங்கி போய் நின்ற அர்ஜுன்- சரஸ்வதியைப் பார்த்து பதறிய தமிழ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வேசுவும் அவரது மாமனாரும் பிரியாணி சாப்பிடுவதைப் பார்த்த அர்ஜுனின் அக்கா கணவர் தனக்கும் பிரியாணி தரும்படி கேட்கின்றார். ஆனால் இருவரும் அவரை கலாய்த்து விட அவர் கோதையைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டுகின்றார். அப்போது இருவரும் தக்காளி சோறு தானே சாப்பிடுகின்றோம். பிரியாணி எப்பிடி வரும். குழந்தை அழுது கொண்டே இருந்ததால வசுவால கீழே வர முடில அதனால தான் நானும் வசு கூட வந்திருந்து சாப்பிடுகிறேன் என கோதையின் கணவர் சமாளித்து விடுகின்றார்.


பின்னர் சரஸ்வதியை பார்க்க அவருடைய வீட்டுக்கு வரும் தமிழின் அப்பா தமிழின் நிலமையை நினைத்து வருத்தப்பட சரஸ்வதி தமிழ் காசுக்கெல்லாம் ஆசைப்பட்டவர் கிடையாது. நீங்க தான் அர்ஜுனைப் பற்றிய உண்மைகளைக் கண்டு பிடிக்கணும் என்று சொல்கின்றார். தொடர்ந்து அவர் போனதும் சரஸ்வதி லைட் எதுவும் போடாமல் துாங்குகின்றார்.

இதனால் சரஸ்வதிக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா என்று நினைத்து தமிழ் எழுப்பி சரஸ்வதியிடம் கேட்கின்றார். அவர் கடையில் வேலை அதிகமாக இருந்திச் இந்த அசதியில துாங்கிட்டேன் என்று சொல்கின்றார். பின்னர் இருவரும் சேர்ந்து சமைக்க செல்கின்றனர். தொடர்ந்து கோதையின் கணவர் நடராஜன் ராகினியை தெனியாக அழைத்து அர்ஜுனை கத்தியால் குத்தியது குறித்து கேட்கின்றார்.


அப்போது ராகினி தமிழ் கத்தியால் குத்தினதை பார்க்கல கத்தியை எடுக்கும் போது தான் பார்த்தேன் என்று சொல்ல அங்கு வரும் அர்ஜுன் ராகினியை அங்கிருந்து அழைத்துச் சென்று விடுகின்றார்.இதனால் நடராஜன் சந்தேகப்படுகின்றார்.பின்னர் வசு கார்த்திக் அப்போ எல்லாம் மாறிட்டான் முதல் மாதிரி இல்லை என்று சரஸ்வதியிடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அர்ஜுனுடைய அக்கா மறைந்திருந்து கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement