• Jul 24 2025

சீரியல்களில் ஹோம்லி லுக்கில் வலம் வரும் நாதஸ்வரம் சீரியல் நடிகையா இது?- மாடர்ன் லுக்கில் சூப்பராக கலக்குகின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. பொதுவாக சின்னத்திரை நடிகைகளை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அவர்கள் நடித்தாலும் சரி, சீரியலில் நடிக்காமல் இருந்தாலும் சில நடிகைகளை மக்கள் கொண்டாடுவார்கள்.

அப்படி ஒரு நடிகை தான் ஸ்ரீதிகா, இவர் 2007ம் ஆண்டு முகூர்த்தம் என்ற தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்த அவர் கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் என நிறைய ஹிட் தொடர்களில் நடித்துள்ளார்.


அதிலும் நாதஸ்வரம் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வளர்ந்துவிட்டார்.சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் கலக்கிய ஸ்ரீதிகா கடந்த 2019ம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  


தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. ஹோம்லி லுக்கில் இருக்கும் இவர் மாடர்ன் உடையில் பார்த்ததும் நம் ஸ்ரீதிகாவா இவர் என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement