• Jul 24 2025

சாப்பிட்ட பாத்திரம் எல்லாம் நயன்தாரா தான் கழுவி வைப்பாங்க- இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு ஓர் சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. திருமணம், ஹனிமூன், இரட்டை குழந்தைக்கு அம்மா என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.

சொந்த வாழ்க்கையில் முன்னேற்றங்களை சந்தித்த நயன்தாராவுக்கு பட வாய்ப்பு சரிந்து வருவதால் அவர் மனவேதனையில் இருக்கிறார்.அதிரடி மாஸ் ஹிட் ஹிட் படங்களை கொடுத்த நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ2, கனெக்ட் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. 


"ரௌடி பிக்சர்ஸ்" தயாரிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, வினய் ராய், ஹனியா நஃபிஸ், சத்யராஜ், அனுபம் கேர் ஆகியோர் நடித்திருந்தனர். 99 நிமிடங்களே ஓடக்கூடிய இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதை கனெக்ட் படம் பூர்த்தி செய்யவில்லை இதனால், நயன்தாராவின் மார்க்கெட் சரிந்து வருகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் கூறியதாவது சில டைம்ல நாங்க வேர்க் முடிஞ்சு சாப்பிட லேட்டாகிடும். அப்பிடி சாப்பிட்டதும் சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாம் நயன்தாராவே கழுவி வைப்பாங்க. வீட்டில 10 வேலைக்காரங்க இருக்கிறாங்க. அவங்களை எழுப்பி அதை பண்ணலாம். ஆனால் நயன் அப்பபிடி இல்லை சுத்தமாக இருக்கனும் அதே டைம்ல மற்றவங்ளையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பாங்க. அதனால தான் அவங்களாவே கழுவி வச்சிடுவாங்க.


இப்பிடி சின்ன சின்ன வேலை எல்லாம் அவங்களே தான் செய்து கொள்ளுவாங்க என்று கூறியுள்ளார். மேலும் நயன்தாரா ஷாருகானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement