• Jul 23 2025

திடீரென தனது இறந்த தங்கை மோனல் குறித்து உருக்கமான பதிவு போட்ட சிம்ரன்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் தான் சிம்ரன். விஜய், அஜித் உள்ளிட்ட பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். தந்பொழுதும் கதாப்பாத்திரங்களில் முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அவரது தங்கை மோனல் சினிமாவில் 'பார்வை ஒன்றே போதுமே' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். குணாலுடன் பல படங்களில் நடித்த அவர் 2002ல் திடீரென தற்கொலை செய்துகொண்டார். 


அந்த நேரத்தில் சினிமா துறையினரை அவரது தற்கொலை கடும் அதிர்ச்சி ஆக்கியது.நேற்று  ஏப்ரல் 14 மோனல் நினைவு தினம் என்பதால் சிம்ரன் உருக்கமாக தங்கை பற்றி இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.


"In loving memory of my beautiful sister monal. You’ll be never forgotten. #sisterlove" என குறிப்பிட்டு தங்கையின் சிறு வயது போட்டோவை அவர் பதிவிட்டிருக்கிறார். சிம்ரனுடன் சேர்ந்து ரசிகர்களும் அவரை நினைவு கூர்ந்த வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement