• Jul 24 2025

பிரபல பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாஸ்டரான நயன்தாரா- புதிய திட்டத்திற்கு வாழ்த்திய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய கனெக்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.இதனை அடுத்து ஷாருக்கானின் ஜவான்  படத்தில் நடித்து வருகின்றார்.

இது தவிர இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் 35-ம் ஆண்டு கலாச்சார விழாவில் பங்குபற்றியிருந்தார். இதன்  பிராண்ட் அம்பாஸடராக நயன்தாரா இருந்து வருகின்றார்.


இதில் உடன் பல்கலைகழக துணைத் தலைவர்கள் திருமதி.மரியா பெர்னாட்டி தமிழரசி, திரு.ஜெ.அருள் செல்வன், செல்வி மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் இருந்தனர். சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரின் சிந்தனையில் உருவான "மதுகை" (The Strength - தி ஸ்ட்ரெங்த்) என்ற திட்டத்தை நயன்தாரா தொடங்கி வைத்தார்.

சுகாதாரப் பொருட்கள் மற்றும் அதிக கலோரி சத்துக்கள் அடங்கிய தொகுப்புகளை விநியோகிப்பதன் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். முதற்கட்டமாக 15 அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகத்தின் வேந்தரால் தத்தெடுக்கப்பட்ட 5 கிராமங்கள் இதனால் பயனடைகின்றன.


நயன்தாராவிற்க்கு திருமணம் முடிந்த பிறகு சத்தியபாமா பல்கலைகழகத்தின் பிராண்ட் அம்பாஸடராக அறிவிக்கப்பட்டது குறித்து சத்தியபாமா பல்கலைகழகம் சார்பில் புகைப்படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Advertisement

Advertisement