• Jul 23 2025

வலி உன்னை ஹீரோ அல்லது வில்லன் ஆக்கும்- அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தணல் திரைப்படத்திலிருந்து வெளியாகிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் நடிகர் முரளி.நகர்ப்புற மற்றும் கிராமப்புற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வருகின்றார்.

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவாகி வரம் திரைப்படம் தான் தணல். இப்படத்தை அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார். அதர்வாவுடன் இணைந்து லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்துள்ளனர்.


மேலும் ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும் எடிட்டிங் பணிகளை கலைவாணன் மேற்கொள்ள, ஸ்டண்ட் மாஸ்டராக ஆர். சக்தி சரவணன் பணிபுரிந்துள்ளார்.


‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகும் படம்தான் 'தணல்'.படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement