• Jul 25 2025

பார்வை இழந்த நபர் கூறியதைக் கேட்டு... கண் கலங்கி அழுத மக்கள்... நீயா நானா ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். அதிலும் குறிப்பாக 'நீயா நானா' நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிகழ்ச்சியானது10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. 


மேலும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத் பிரமாதமாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்றன. 


அந்தவகையில் இந்தவாரம் "junior ரசிகர்கள், senior ரசிகர்கள்" என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றது. அதில் ஒருவர் கூறுகையில் "பிறவியில் இருந்து எனக்குப் பார்வை இல்லை, சின்னதாக ஒரு வெளிச்சம் தெரிஞ்சிட்டு இருந்திச்சு, அந்த வெளிச்சமும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நின்றிடிச்சு" என்றார்.


மேலும் ராஜா சார் பாட்டு ஒண்ணு, மனமே நீ துடிக்காதை, லைப்ல என்ன தான் இல்லை எல்லாம் வந்திட்டுப் போகலாம், வாழலாம்லயா, முதுகைத் தட்டிக் கொடுத்த மாதிரி எனக்கொரு பீல் இருந்திச்சு" என்கிறார். கண் தெரியாத அந்த நபர் கூறியதைக் கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் கண் கலங்குகின்றனர்.


Advertisement

Advertisement