• Sep 11 2025

பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படங்களை புறக்கணித்தது ஏன்?-69வது தேசிய விருது விழாவால் எழுந்த புதிய சர்ச்சை

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்த 69வது தேசிய விருதுகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இவ் விருதுக்க தேர்வாகியகலைஞர்களின் பட்டியல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

 அதில் RRR, புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு அதிகம் விருதுகள் கிடைத்து இருக்கிறது. மேலும் தமிழில் எந்த ஒரு படத்திற்கும் விருது கிடைக்கவில்லை.இரவின் நிழல் படத்தில் மாயவா தூயவா பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகி விருது கிடைத்து இருக்கிறது.


மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'கடைசி விவசாயி' படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.இந்நிலையில் 69 வது தேசிய விருதில் சிறந்த நடிகருக்காக ஜெய் பீம் படத்திற்காக சூர்யா அல்லது கர்ணனுக்காக தனுஷ் அல்லது சார்பட்டா பரம்பரை படத்துக்காக ஆர்யா வெல்லுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 


ஆனால் இப்படங்கள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இதனால் சர்ச்சைக்குரிய விடயமாகவே இது ரசிகர்களிடையே பார்க்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement