• Sep 08 2025

நான் மூச்சு விடுறதுக்கே இடமில்லை,- புகழ்ந்த இசையமைப்பாளர் தமனை கலாய்த்த மைத்திரன்- Super Singer Junior 9 Promo- விழுந்து விழுந்து சிரித்த கெஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பல சீசன்களாக ஹிட்டாக ஓடும் ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது ஜுனியர்களுக்கான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனில் அந்தோணி தாஸ், இசையமைப்பாளர் தமன், பாடகி சித்ரா ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் ஸ்பெஷல் கெஸ்டாக நடிகர் அப்பாஸ் பாடகி சுவேதா, பாடகர் உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


தற்பொழுது இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மைத்திரன் என்னும் சிறுவன் லியோ படத்தின் நான் ரெடி தான் என்னும் பாடலை சிறப்பாகப் பாடி இருந்தார். ராஃப் எல்லாம் சூப்பராக பாடியதால் தமன் நான் உன்னோட ரசிகன் ராஃப் எல்லாம் ரொம்ப கஷ்டம் என்று என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட மைத்திரன் நான் மூச்சு விடுறதுக்கே இடமில்லை என்று சொல்லி கலாய்த்துள்ளார். இதைக் கேட்ட கெஸ்ட் எல்லோரும் சிரிக்கின்றனர். மேலும் மேடைக்கு வந்த மைத்திரனின் அப்பா என் மகனைப் பார்க்கும் போது என்னை பார்க்கிற மாதிரியே இருக்கு என்று பெருமையாக இருக்கு என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement