• Jul 24 2025

மாகாபாவுடன் நடனம் ஆடும் நடிகை குஷ்பு... வெளியானது அடுத்த Super Singer Junior 9 Promo...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றுதான் கூறவேண்டும்ஏனெனில் திரைத்துறையில் பின்னணி பாடகர்களாக இருக்கும் பலருக்கும் அடித்தளமிட்டுக் கொடுத்தது இந்த சூப்பர் சிங்கர் மேடை தான். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது.


மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருந்து வருகிற இந்த ஷோ ஜூனியர், சீனியர் என மாறி மாறி இடம்பெற்று வருகின்றது.


இந்த நிகழ்ச்சியில் தற்போது ஜூனியர்களுக்கான 9-ஆவது சீசன் இடம்பெற்று வருகின்றது. இதில் காலத்தால் அழியாத இசையின் காதலனை கொண்டாடும்  'Celebrating SPB'  ரவுண்ட் நடைபெறுகிறது.   


போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் பாடல்களை தேர்வு செய்து மிகவும் அழகாகப் பாடுகின்றனர். இந்த ரவுண்டிற்கு சிறப்பு விருந்தினராக நடிகை குஷ்பூ அழைக்கப்பட்டிருக்கின்றார். மாகாபா மற்றும் நடிகை குஷ்பூ அவர்கள் இருவரும் பாடல் பாடி ஆடுவது போல ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.

 


Advertisement

Advertisement