• Jul 24 2025

லியோ படத்தின் டைட்டில் வீடியோவைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்த CSK- விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கும் உடனடியாக தொடங்கப்பட்டது.


மேலும், கடந்த மூன்று தினங்களாக அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு அசத்தி வருகிறது படக்குழு. இந்நிலையில், தளபதி 67 டைட்டில் லியோ என ப்ரோமோவுடன் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து லியோ என்ற டைட்டில் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

அதன்படி இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், தளபதி 67 டைட்டில் லியோ என அறிவிக்கப்பட்டதும் திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். டைட்டில் ப்ரோமோவுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் லியோ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. தோனி தலைமையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சிஎஸ்கே அணியின் லோகோவில் சிங்கம் இருக்கிறது. அதன் பெயரான Leo-வை குறிப்பிட்டு தான் அப்படி டுவிட் செய்துள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம். 


அதேபோல் சிஎஸ்கே அணியின் டுவிட்டர் அட்மின் பெயரும் Leo என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு டுவிட்டில் சிஎஸ்கேவின் லோகோவில் இருக்கும் பிளடி ஸ்வீட் என்ற கேப்ஷனை லியோ டீம் கூறியதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement