• Jul 25 2025

அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஒகே சொல்லாமல் எந்த நடிகையாலும் நடிக்க முடியாது- பரபரப்பை கிளப்பிய நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்த வரையில் என்ன விஷயங்கள் தவறாக நடந்தாலும் அதனை வெளிப்படையாகப் பேசுவதில்லை.  பலர் இதுபோன்ற விஷயங்களை கண்டும் காணாமல் கடந்து செல்வதை வழக்கமாக வைத்துளள்னர். ஆனால் தற்பொழுது பிரபல நடிகர் ஒருவர் பேசிய விடயம் வைரலாகி வருகின்றது.

அதாவது காதல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சுகுமார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சுகுமார் காதல் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அவரால் காமெடி நடிகராக ஜொலிக்க முடியவில்லை. நடிப்பை தாண்டி திரைப்படங்கள் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.


இந்நிலையில்,  இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில்,"நானும் சிம்புவும், இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக தான் இருக்கிறோம். ஆனால் ஒரு பிரபலத்தை வைத்து வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருந்ததில்லை. ஆனால் கூல் சுரேஷ் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார் என கூறியுள்ளார்.

அதேபோல் சினிமாவில் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். அதற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால், அவர்களால் நடிக்க முடியாது என்பதை ஓபனாகவே பேசி உள்ளார். அதே போல் இந்த உலகத்தில் வாய்ப்பு கிடைக்காத வரை நல்லவர்களாக தான் நடிப்பார்கள்.


 வாய்ப்பு கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்தில் நாம் இருந்து நடிக்க வேண்டும் என்றால் இருக்கலாம் தேவை இல்லை என்றால் ஒதுக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் என மிகவும் எதார்த்தமான பேசியுள்ளார்.இவர் பேசிய இந்த விடயம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement