• Jul 25 2025

அதிதி ராவ் ரிலேஷன்சிப் குறித்து ஓபனாக பதில் சொன்ன சித்தார்த்- இவ்வளவு கோபப்பட்டு பேசி இருக்காரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சித்தார்த்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஜ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் பொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

சினிமாவைத் தாண்டி அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அதன் படி நடிகை அதிதி ராவ்வுடன் தற்பொழுது காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன சித்தார்த் அதிதி ராவை காதலிப்பதாக கூறப்டுகின்றது.


இவர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு செல்லும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த் அவரது அடுத்த படமான டக்கர் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் காதல் விவகாரம் பற்றி கேள்வி கேட்டபோது சித்தார்த் கோபமாக பதிலளித்து இருக்கிறார்.


இது என் பர்சனல் விஷயம், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அதை பற்றி பேச விரும்பவில்லை. உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தால் தனியாக பேசும்போது சொல்கிறேன் என அவரிடம் கூறி இருக்கிறார் சித்தார்த். இவரின் இந்த காட்டமான பதில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement