• Jul 23 2025

எவ்வளவு சோகம் இருந்தாலும் முகத்தில் காட்டாது- ப்ரியங்காவைப் புகழ்ந்து தள்ளிய பிரபல காமெடி நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் வலம் வரும் நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர் என்றே கூறலாம். அந்த வகையில், தொகுப்பாளினிகளில் திவ்யதர்ஷினி என்கிற டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய துறுதுறு பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதுதவிர ஒல்லி பெல்லி, ஸ்டார்ட் மியூசிக், தி வால் போன்ற நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார். 


தொகுப்பாளினி பிரியங்காவுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலுத்து திருமணம் செய்துகொண்டார். 

பிரியங்கா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை முன்னேறிய பிரியங்கா, டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டு 2-ம் இடத்தைப் பிடித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். இந்த நிலையில் காமெடி நடிகர் பழனி தன்னைப் பற்றி புகழ்ந்து சொன்ன வீடியொவைப் பதிவிட்டுள்ளார்.அதில் பழனி கூறியிருப்பதாவது ப்ரியங்கா எவ்வளவு கவலை இருந்தாலும் அதனை  முகத்தில் காட்டிக் கொள்ளமாட்டார்.ரொம்ப நல்ல காரெக்டர் என்றும் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement